விளம்பரச் சுட்டிகளைப் பயன்படுத்தி சம்பாதிக்கலாம்

இந்த வேலை பிளாக்கர், வேர்ட்பிரஸ் போன்ற தளங்களில் வலைப்பூக்களை இயக்குபவர்களுக்கும், பேஸ்புக் டிவிட்டர்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் நம் நண்பர்களோடு சில வலைமுகவரிகளைப் படிக்கச் சொல்லி பகிர்ந்துக் கொள்வது வழக்கமே. இனி அவ்வாறு பகிர்ந்துக் கொள்ளும் போது அந்த முகவரிகளை விளம்பரச் சுட்டிகளாக மாற்றி பகிர்ந்துக் கொள்ளுங்கள். விளம்பரச் சுட்டி என்றால் நீங்கள் கொடுக்கும் வலை முகவரிக்குரிய பக்கத்தில் (அல்லது) அதற்கு முன்பாக சில வினாடிகளுக்கு ஒரு விளம்பரம் காட்டப்படும். இவ்வாறு எத்தனை பேர் உங்கள் விளம்பரச் சுட்டிகளை கிளிக் செய்கிறார்களோ அதற்கேற்ற ஊதியம் உங்களுக்கு கிடைக்கும். சுமாராக நீங்கள் கொடுக்கும் விளம்பரச் சுட்டியை 1000 பேர் கிளிக் செய்தால் 5$ சம்பாதிக்கலாம், வலைப்பூக்களை நிர்வாகிப்பவர்களுக்கோ, டிவிட்டர் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கும் இது ஒரு பொருட்டே அல்ல, எளிதாக அதிக கிளிக்குகளைப் பெற்றுவிடலாம். இனி எவ்வாறு விளம்பரச் சுட்டிகளை உருவாக்குவது என காணலாம்.
கீழுள்ள தளத்தில் இணைந்த பிறகு, நீங்கள் விளம்பரச் சுட்டியாக்க விரும்பும் வலைமுகவரியை Shrink என்ற கட்டத்தில் இடுங்கள். பின்பு, View more options என்ற தொடுப்பை சொடுக்குங்கள்.
அதில் Advertising Type என்ற கட்டத்தில் Interstitial Advertisement ($$$$$), Framed Banner ($$$) என இரண்டு ஆப்ஷன்களைக் காணலாம். முதல் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால் நீங்கள் பகிரும் வலைப்பக்கத்திற்கு முன்பு ஒரு விளம்பரம் சில வினாடிகளுக்குக் காட்டப்படும், இங்கு சொடுக்கி ஒரு உதாரணத்தைப் பாருங்கள். இரண்டாவது ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால் நீங்கள் பகிரும் வலைப்பக்கத்தின் மேலேயே ஒரு சின்ன விளம்பரம் காட்டப்படும். இங்கு சொடுக்கி ஒரு உதாரணத்தைப் பாருங்கள். இரண்டாவது விளம்பர வகையை விட முதல் வகைக்கு ஊதியம் அதிகம். Domain, Custom Name, Folder என்ற கட்டங்களை எல்லாம் அப்படியே விட்டுவிடுங்கள். பின்பு படிவத்தை சமர்பித்ததும் உங்களுக்கு விளம்பரச் சுட்டி கிடைக்கும், அதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளவும். அவ்வளவு தான்.