ஒன்லைன் டேட்டா என்ட்ரி வேலை.

முதல் வேலை டேட்டா என்ட்ரி. இந்த வேலையில் நீங்கள் தட்டச்சு பணி செய்ய வேண்டும். இன்று நிறைய மக்கள் ஆன்லைனில் விரும்பி செய்வது டேட்டா என்ட்ரி வேலைகளைத் தான். இதற்கு எந்த அனுபவமும் தேவையில்லை. வீட்டில் இருந்தவாறே உங்கள் ஓய்வு நேரங்களில் இந்த டேட்டா என்ட்ரி வேலையை செய்து நன்கு சம்பாதிக்கலாம். கீழே உள்ள படத்தை நிச்சயம் ஜிமெயில், யாஹூ, பேஸ்புக் போன்ற தளங்களில் கணக்கு தொடங்கும் போது பார்த்திருப்பீர்கள். இதனைத் தான் கேட்ப்சா என்பார்கள். கேட்ப்சா போலி கணக்குகள் உருவாவதை தவிர்க்கும். கிட்டத்தட்ட அனைத்து தளங்களும் இன்று கேப்ட்சா பரீட்சை வைத்துதான் உறுப்பினர்களை சேர்த்து கொள்கின்றன. எனவே கேப்ட்சா இல்லாமல் இன்று இணையம் கிடையாது என்றே சொல்லலாம். இவைகளின் பயன்பாடு அந்தளவு இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
கேப்ட்சா
கேப்ட்சாவின் முக்கியத்துவத்தை இப்பொழுது அறிந்திருப்பீர்கள். தினமும் இணையத்தில் கோடிக் கணக்கான கேப்ட்சாக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே கேப்ட்சாக்களை சில கம்பனிகள் தயாரித்து இணையதளத்தில் விற்று வருகின்றன. இந்த கேப்ட்சா தயாரிக்கும் பணியில் தான் நீங்கள் உதவி செய்ய வேண்டும். அதற்கான தொகை சம்பளமாக வழங்கப்படும். உங்களுக்கு கேப்ட்சா படங்களை தந்து விடுவார்கள். அந்த படங்களில் எழுதப்பட்டுள்ள சொற்களை நீங்கள் டைப் செய்து கொடுக்க வேண்டும். அவ்வளவு தான். எவ்வளவு படங்களை பதிவு செய்து கொடுக்கிறீர்களோ அவ்வளவு தொகை ஊதியமாக வழங்கப்படும். கீழே உள்ள படத்தை பாருங்கள்…
கேப்ட்சா படத்திற்கு கீழே உள்ள கட்டத்தில் அதற்குரிய சொற்களை டைப் செய்து ‘Submit Answer’ என்ற தொடுப்பை சொடுக்க வேண்டும். ஒரு கேப்ட்சாவை பதிவு செய்தவுடன் அடுத்த படம் உடனே தோன்றும். பின்பு அதனை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு படங்களை பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டியது தான். ஒரு மணி நேரத்திற்குள் நீங்கள் பல படங்களை பதிவு செய்து இருப்பீர்கள். இது ஒரு எளிமையான டேட்டா என்ட்ரி வேலை. குறைந்தது 3$ (மூன்று டாலர்) சம்பாதித்தால் கூட உங்கள் பேசா அக்கௌண்டிற்கு எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் உங்களது பேசா கணக்கிற்கு டேட்டா என்ட்ரி வெப்சைட்டில் இருந்து சம்பளம் அனுப்பப்படும். இந்த டேட்டா என்ட்ரி வேலையில் இணைந்து பணிபுரிய எந்த கட்டுப்பாடும் இல்லை. ஒரு பேசா அக்கௌண்ட், இணைய வசதி கொண்ட ஒரு கணினி இருந்தாலே போதுமானது. கீழுள்ள தொடுப்பை கிளிக் செய்து இந்த வேலையில் சேரலாம்.

ஆன்லைன் டேட்டா என்ட்ரி – இங்கு கிளிக் செய்க


இந்த தொடுப்பை கிளிக் செய்துவுடன் தோன்றிய பக்கத்தில் உள்ள ‘Free Signup’ என்ற பட்டனை அழுத்துங்கள். அதில் உள்ள படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும். ‘Payment type’ என்ற தலைப்பின் கீழ் ‘Payza’ என்பதை தேர்வு செய்து, ‘Payza Email’ என்ற கட்டத்தில் உங்களது பேசா ஈமெயில் முகவரியை டைப் செய்யவும். இந்த தகவல் மிகவும் முக்கியமானது. ஒருமுறை உங்கள் பேசா ஈமெயில் முகவரியை இந்த வெப்சைட்டில் பதிவு செய்துவிட்டால் பின்பு திருத்தவே முடியாது. எனவே முதல் முறையிலேயே கவனமாக டைப் செய்யுங்கள். எல்லாம் முடிந்த பிறகு படிவத்தை சமர்ப்பியுங்கள். உங்களது டேட்டா என்ட்ரி அக்கௌண்ட் தயார். இனி லாகின் செய்து ‘Solve  Images’ என்ற தொடுப்பை சொடுக்கி சம்பாதிக்கலாம்.

குறிப்புகள்
  1. ஒருவருக்கு ஒரு கணக்கு மட்டுமே இருக்க வேண்டும். ஒரு கணினியை பயன்படுத்தி பல அக்கௌண்ட்களை தொடங்காதீர்கள். பல அக்கௌண்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் டேட்டா என்ட்ரி வெப்சைட் நம்மை வேலை செய்ய அனுமதிக்காது.
  2. படத்தில் உள்ள சொற்களை கண்டிபிடிக்க தெரியவில்லை என்றால் ‘Don’t Know’ என்ற பட்டனை அழுத்துங்கள். எனினும் அடிக்கடி இந்த பட்டனை பயன்படுத்த வேண்டாம்.
  3. படங்களை டைப் செய்யும் போது, ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்பினால் ‘Submit and Pause’ என்ற பட்டனை அழுத்துங்கள்.
இது ஒரு அழகான வேலை. நமது ஓய்வு நேரங்களை பயன்படுத்தி கொள்ளும் வகையில் இந்த டேட்டா என்ட்ரி வெப்சைட் வடிவமைக்கப்பட்டுள்ளது.