வலைப் பக்கங்களை உலாவுதல் மூலமும் சம்பாதிக்கலாம்


“இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம்?” என உலாவும் போது, தற்செயலாக இங்கு வந்திருப்பீர்கள். அறிந்து கொள்ளுங்கள் இணையத்தில் உலாவுவது கூட ஒரு ஆன்லைன் வேலை தான்! இத்தளம் கிட்டத்தட்ட நியோபக்ஸ் மாதிரி. நியோபக்சில் நீங்கள் விளம்பரங்களை கிளிக் செய்ததும் பணம் கிட்டும், ஆனால் இத்தளத்தில் பணத்திற்கு பதிலாக டோக்கன்களை (கிரடிட்) தருவார்கள். 1:1 கிரடிட் என்றால் ஒரு கிளிக்கிற்கு 1 டோக்கன், 2:1 கிரடிட் என்றால் ஒரு கிளிக்கிற்கு இரண்டு டோக்கன்கள், 1:2 கிரடிட் என்றால் 2 கிளிக்குகளுக்கு 1 டோக்கன். 2003-இல் இருந்தே இத்தளம் இணையத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஒரு நாளிற்கு எத்தனை கிளிக்குகள் வேண்டுமானாலும் செய்ய முடியும். நீங்கள் 1000 டோக்கன்களை சேர்த்ததும் 0.3 டாலர்கள் இலவசமாக கிடைக்கும். 3$ பெற்றவுடன் உங்களது பேசா கணக்கிற்கு எடுத்து கொள்ளலாம். இத்தளத்தில் கிட்டும் டோக்கன்களை வைத்து நீங்கள் விரும்பும் எந்த வலைமுகவரிக்கும் ஹிட்ஸ்களை பெறலாம். உதாரணத்திற்கு, நீங்கள் 500 கிரடிட்களை பெற்றுள்ளீர்கள் என வைத்து கொள்வோம். உங்களுக்கென ஒரு வலைப்பூ இருந்தால் இந்த கிரடிட்களை கொண்டு ஹிட்ஸ் பெறலாம்.
முதலில் ‘My Account – Statistics’ என்ற தொடுப்பை சொடுக்கி ‘Unassigned credits – Assign’ என்ற லின்கை தேர்வு செய்யுங்கள். அதன் பின், உங்களது வலைமுகவரியை சமர்பிக்க வேண்டும். இனி, பிற உறுப்பினர்கள் உங்களது வலைப்பூவை பார்வையிடுவார்கள். ஒரு பார்வைக்கு 1 கிரடிட் வழங்கினால் 500 ஹிட்ஸ்கள்.