உங்களது வெப்சைட்டை பயன்படுத்துங்கள்

இன்று எல்லாரும் பிலாகரில் ஒரு வலைப்பூ வைத்திருக்கிறார்கள். இன்னும் உங்களுக்கென ஒரு வெப்சைட் இல்லையென்றால், இப்பொழுது தொடங்குங்கள். புதிய வலைப்பூ ஆரம்பிப்பது ஒரு பெரிய வேலை அல்ல. www.blogger.comwww.weebly.com போன்ற தளங்கள் எல்லாம் நமக்கு இலவச வெப்சைட்களை வழங்குகின்றன. இவைகளை பயன்படுத்தி பயனுள்ள வலைப்பூக்களை உருவாக்குங்கள். பிறருக்கு பயன்படும் நல்ல செய்திகளை வெளியிடுங்கள். உங்களது வாசகர்களிடம் நல்ல நட்புறவையும் வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரு வெற்றிகரமான தளத்தை பராமரித்து வருவது பல நன்மைகளை கொடுக்கும். இன்று பல மக்கள் தங்களது வலைப்பூக்களில் விளம்பரங்களை வெளியிட்டு பயனடைந்து வருகிறார்கள். நீங்களும் இவ்வாறு பயனடையலாம். ஒரு ஓரத்தில் சின்ன விளம்பரத்தை வெளியிடுங்கள். சில நேரங்களில் அந்த விளம்பரம் உங்களது வாசகர்களுக்கு பயனுள்ளதாக அமையும். எனவே அவர்கள் அதனை கிளிக் செய்தால், அதற்கான தொகை உங்களுக்கு கிட்டும். உங்களது வலைப்பூ வெறுமையாக இருப்பதற்கு சிறிது இடத்தை இதற்காக பயன்படுத்துங்கள். இதனால் உங்களது வெப்சைட்டும் அழகாக தென்படும்.

இந்த தளத்தில் இணைந்தவுடன், எளிதாக விளம்பரங்களை பெற்று வெளியிடலாம். முதலில், உங்களது வலைமுகவரியை இணைக்கவும், பின் விளம்பரங்களை வடிவமைத்து அதற்குரிய HTML CODE – ஐ பெற்றுவிடவும். அதை அப்படியே காப்பி செய்து உங்கள் வலைப்பூவில் ஒட்டி விடுங்கள். இனி உங்கள் வலைப்பூவில் விளம்பரங்கள் அழகாக தோன்ற ஆரம்ரபிக்கும். இத்தளத்திலேயே வழிமுறைகள் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே கவலை வேண்டாம். நீங்கள் உங்களது கணக்கை லாகின் செய்ததும் இவ்வழிமுறைகளை காணலாம். கீழுள்ள படத்தை பார்க்கவும். உங்களுக்காக ஒரு சின்ன எடுத்துகாட்டு.
Picture
1) முதலில் ‘Step one’ என்ற வரிக்கு நேரே உள்ள தொடுப்பை கிளிக் செய்யவும். ஒரு புதிய படிவம் தோன்றும். அதனை கீழுள்ளவாறு பூர்த்தி செய்யுங்கள்.
Website Name: உங்களது வலைப்பக்க முகவரி (http://www இல்லாமல்)
Website URL: உங்களது வலைப்பக்க முகவரி (http://www சேர்த்து கொள்ளவும்)
Website Description: உங்களது வலைப்பூவை பற்றி ஒரு சின்ன அறிமுகம்
Product Group: உங்களது வலைப்பூவின் மையப்பொருளை இக்கட்டத்தில் தேர்வு செய்யவும். ஒருவேளை நீங்கள் நாட்டு நலனை பற்றி செய்திகள் வெளியிட்டிருந்தால், ‘Culture and Society’ என்று தேர்வு செய்யுங்கள்.
Website Tags: உங்கள் வலைப்பூவோடு தொடர்புடைய சில முக்கிய சொற்களை இக்கட்டத்தில் பூர்த்தி செய்யுங்கள். ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே காற்புள்ளி (,) இடவேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் சினிமா துறையை பற்றி ஒரு வலைப்பூ வைத்திருந்தால், நீங்கள் பூர்த்தி செய்யவேண்டிய சொற்கள் – Cinema, Movie, Box Office Hit, Hollywood, Bollywood etc…
What Language Is Your Website? உங்கள் மொழி இல்லாவிடில், ‘English’ என்றே தேர்வு செய்யுங்கள்.
Where Will The Ads Appear On Your Website? உங்கள் வெப்சைட்டில் எங்கு விளம்பரங்களை வெளியிட விரும்புகிறீர்களோ, அதனை இக்கட்டத்தில் தெரிவியுங்கள். அதாவது நீங்கள் வலைப்பக்கத்தின் மேல் பகுதியில் விளம்பரங்களை வெளியிட விரும்பினால், ‘Top of the Webpage’ என்று பூர்த்தி செய்யலாம்.
Do You Have Any Ad Restrictions? ‘No’ என்று தேர்வு செய்யவும்.
What Age Group Are Most of Your Websites Users? ‘All Ages’ என்று தேர்வு செய்யுங்கள்.
What Gender Group Are Most of Your Websites Users?  ‘Mixed’ என்று தேர்வு செய்யுங்கள்.
From Which Geographic Locations Do Most Of Your Websites Users Come From? உங்களது வலைப்பூவிற்கு எந்த பகுதியில் இருந்து வாசகர்கள் அதிகமாக வருகை தருகின்றனரோ அதனை இங்கு தெரிவியுங்கள். எடுத்துக்காட்டு: ‘Asia’, ‘North America’, ‘Europe’ etc…2) படிவத்தை பூர்த்தி செய்தபின்பு சமர்ப்பியுங்கள். இனி மீண்டும் முதல் பக்கத்திற்கே சென்று, ‘Step two’ என்ற வரிக்கு நேரே உள்ள தொடுப்பை கிளிக் செய்யவும். அதில் உள்ள படிவங்களை கீழுள்ள வழிமுறைகள் படி பூர்த்தி செய்யலாம்.அ) Text – எழுத்து விளம்பரங்களுக்கான படிவம்:
My Websites: உங்களது வலைப்பூ முகவரிi) Add New Text Ad Productஒருவர் உங்களது வலையில் விளம்பரங்களை வெளியிட விரும்பினால், நீங்கள் எத்தகைய விளம்பரங்களை அனுமதிப்பீர்கள், எவ்வளவு கட்டணம் கோருவீர்கள் முதலான தகவல்களை இப்படிவத்தில் தெரிவிக்கவும்.எடுத்துக்காட்டு: 30 நாளிற்கு ’2$’ என்று பூர்த்தி செய்யலாம். இது சரியான கட்டணம். நீங்கள் சற்று அதிகமாக பெற விரும்பினால், அதன்படியும் பூர்த்தி செய்யலாம். இனி உங்களது கட்டண விவரங்களை இத்தளம் தனது விளம்பரத்தாரர்களுக்கு சமர்பிக்கும். யாரேனும் உங்கள் வலைப்பூவில் விளம்பரங்களை வெளியிட விரும்பினால், கட்டணத்தை செலுத்துவார்கள். உங்களுக்கு ஒரு அறிவிப்பும் தெரிவிக்கப்படும்.
ii) Add Pay Per Click Text Ad Productஇந்த விளம்பரங்களுக்கு நீங்கள் காத்திருக்க தேவையில்லை. உடனடியாக வெளியிட்டு சம்பாதிக்க ஆரம்பிக்கலாம். உங்களுக்கு ஒரு HTML Code தரப்படும். அதை உங்கள் வலைப்பூவில் ஒட்டியவுடன் விளம்பரங்கள் தோன்ற ஆரம்பிக்கும். யாராவது அந்த விளம்பரங்களை கிளிக் செய்தால், உங்கள் கணக்கில் பணம் சேரும்.
ஒரு கிளிக்கிற்கு எவ்வளவு பெற விரும்புகிறீர்களோ அதனை ‘Cost Per Click’ என்ற கட்டத்தில் பூர்த்தி செய்யவும். ஒரு கிளிக்கிற்கு நியாயமான விலை 0.02$. ‘Minimum Spend’ என்ற கட்டத்தின் கீழ் 2$ என்று பூர்த்தி செய்யுங்கள்.
ஆ) Image – சித்திர விளம்பரங்களுக்கான படிவம்:இந்த படிவங்களும் முந்தியவை போல தான். ‘Size’, ‘Max.no of ads’ என்ற இரண்டு கட்டங்கள் மட்டுமே கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் எந்தளவு விளம்பரங்களை வெளியிட விரும்புகிறீர்களோ அதனை ‘Size’ என்ற கட்டத்தில் தெரிவிக்கவும். 300 X 250, 728 X 90, 468 X 60 அளவான விளம்பரங்கள் அழகாக தெரிபவை. எத்தனை விளம்பரங்களை நீங்கள் வெளியிட விரும்புகிறீர்களோ அதனை ‘Max.no of ads’ என்ற கட்டத்தில் தெரிவிக்க வேண்டும். அதிக பட்சமாக 4 விளம்பரங்களை ஒரு பக்கத்தில் வெளியிடலாம்.
3) இவைகளுக்கு பிறகு, முதல் பக்கத்திற்கு சென்று ‘Step Three’ என்ற தொடுப்பை கிளிக் செய்யுங்கள். உங்களது விளம்பரங்களுக்கான HTML Code-கள் கிடைக்கும். அதனை உங்கள் வெப்சைட்டில் ஒட்டினால் விளம்பரங்கள் தோன்றும்.எக்காரணத்தை கொண்டும் உங்கள் விளம்பரங்களை நீங்களே கிளிக் செய்யகூடாது. உங்களது நண்பர்கள், உறவினர்கள் என யாரையும் கிளிக் செய்யவும் தூண்டாதீர்கள். வாசகர்கள் விரும்பினால் கிளிக் செய்யட்டும் என விட்டு விடவேண்டும். இது ஆன்லைனில் சம்பாதிக்க ஒரு சிறந்த வெப்சைட். 25 டாலர்களை சேர்த்தவுடன் உங்களது பேசா கணக்கிற்கு எடுத்து கொள்ளலாம்.