படிப்பிற்கேற்ற வேலை

‘ஆன்லைன் வேலைகள்’ என்றவுடன் தங்கள் படிப்புகேற்ற வேலைகள் எதாவது கிட்டும் என்று நினைத்து சில பேர் வருவார்கள். நீங்கள் ஒருவேளை அத்தகைய எண்ணத்தோடு இங்கு வந்திருந்தால், உங்களை வெறுமையாக அனுப்ப மனதில்லை. உங்கள் படிப்புகேற்ற வேலைகளும் ஆன்லைனில் உள்ளன… இணையத்தில் பிராஜக்ட்கள் செய்து கொடுத்தும் சம்பாதிக்கலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எஸ்.சி, எம்.எஸ்.சி, பி.இ படித்தவர்கள், எம்.சி.ஏ பட்டதாரிகள், பிரோகிராமிங்க் தெரிந்தவர்கள் ஆகியோருக்கு இந்த வேலை மிகவும் ஏற்றது. ஆனால் ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள் – சமூகத்தில் இந்த வேலைகளுக்கு எவ்வளவு போட்டியும், தேவையும் இருக்கிறதோ, அதே போல ஆன்லைனிலும் உள்ளன. பிராஜக்ட்களுக்கு நீங்கள் முயற்சி செய்யும் போது, உங்களுக்கு போட்டியாக நிறைய ஐ.டி துறையினர்களை சந்திக்க நேரிடும். அவர்களை எல்லாம் பின்தள்ளி அந்த பிராஜக்டை பெறுவது என்பது கொஞ்சம் கடினமே. ஒவ்வொரு பிராஜக்ட்களுக்கும் நல்ல சம்பளம் கிடைக்கும் – 2000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை. உங்களது சேமிப்புகளை செக் அல்லது பேன்க் டெபாசிட்டாக பெற்று கொள்ளலாம். கீழுள்ள தளங்களில் நிறைய பிராஜக்ட்கள் பட்டியல் இடப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு, வெப்சைட் ஒன்றை வடிவமைத்து தருமாறு ஒருவர் பிராஜக்ட் சமர்ப்பித்திருக்கிறார் என வைத்து கொள்வோம். உங்களுக்கு அவ்வேலை பிடித்திருந்தால் அதனை சொடுக்குங்கள். உடனே ஊதிய விவரங்கள், வெப்சைட்டை வடிவமைப்பதற்கான விதிமுறைகள், தேவையான தகுதிகள் முதலிய தகவல்கள் அடங்கிய ஒரு பக்கம் தோன்றும். அவ்வேலைக்கு நீங்கள் தயாரெனில் “Send a message to the employer” என்ற தொடுப்பை சொடுக்கி உங்களது விருப்பத்தை அந்த நபருக்கு எழுதி அனுப்பலாம். இங்கு தான் சவாலே ஆரம்பிக்கும்! – உங்களை போல நிறைய மக்களும் விண்ணப்பிப்பார்கள். அதில் முக்கால் பங்கு ஐ.டி தொழில்துறையை சார்ந்தவர்களாக இருப்பார்கள். ஏற்கனவே இத்தகைய பிராஜக்ட்டுகளை செய்து கொடுத்ததற்கான சான்றுகளையும், தங்களது அனுபவத்திறன்களையும் அனுப்பிவைப்பார்கள். எனவே, இவர்களுக்கு முன்னுரிமை அதிகமாக கிடைக்கும். முயற்சித்து பாருங்கள்… நீங்கள் இவ்வேலையில் பிராஜக்ட்களை பெற ஆரம்பித்துவிட்டால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்! ஆனால் ஏன் இவ்வாறு போராட வேண்டும்? நமது வாழ்க்கை சூழ்நிலைகளை மேம்படுத்தி கொள்ள வருமானம் தேடுகிறோம். அதற்கு மேழுள்ள வேலைகளில் வெற்றிபெற்றாலே நம் எண்ணம் நிறைவேறிவிடும்.

பிராஜக்ட் வேலைகள் – 1